கூன்
பாண்டியனை, நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்
பாண்டிய நாட்டின் மன்னன் கூன் பாண்டியன்
புறச்சமயம் தழுவி சைவ சமயத்தை ஒடுக்கி மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வந்தான். மதம்
மாற்றிகளின் சூழ்ச்சியிலிருந்து பாண்டிய மன்னனை மீட்டு மக்களை காப்பதற்காக ஞான சம்பந்தர்
உடனே மதுரை நோக்கிக் கிளம்பினார். அப்போது அப்பரடிகள் ஞான சம்பந்தரைப் பார்த்து ”நாளும்
கோளும் சரியில்லை பிறகு செல்லலாம்” என்றார். ” வேயுறு தோளிபங்கன்” என்ற கோளறு திருப்பதிகத்தை
பாடி மதுரைக்கு புறப்பட்டார். மதுரையில் மாற்றுச் சமயத்தாரின் செயலால் ”வெப்பு நோயால்”
துடித்துக் கொண்டிருந்தான் கூன் பாண்டியன். ”மந்திரமாவது நீறு” என்ற பதிகத்தைப் பாடி
மன்னனின் நோயை நீக்கினார்.
கோபங் கொண்ட புற
சமயத்தார், அனல்வாத போட்டிக்கு அழைத்தனர். ஞானசம்பந்தரும் திருநள்ளாற்று பதிகத்தைப்
பாடி அந்த ஓலைச்சுவடியைத் தீயிலிட்டார். ஆனால் அது நெருப்பிலிருந்து பச்சை ஏடாகவே மேலெழுந்தது.
ஆகவே இன்றும் அந்தப் பதிகத்திற்கு பச்சை ஏட்டுப் பதிகம் என்றே பெயர்.
மீண்டும் கோபம்
கொண்ட புறச்சமயத்தார், புனல் வாத போட்டிக்கு
ஞானசம்பந்தரை அழைத்தனர். ”வாழ்க அந்தனர்” எனத் துவங்கும் பதிகத்தை வைகை ஆற்றில் விட்டவுடன்
ஆற்று நீரில் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே தொலைதுார கிராமத்தின் கரையில் ஒதுங்கியது
பதிக ஏடு… அந்த ஊரே திருவேடகம். வைசம் தழைத்தது. கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாக
மாறினான். சமயப் பாதுகாப்பே மீண்டும் சாதித்தார் சம்பந்தர்.

No comments:
Post a Comment